Tuesday, October 19, 2010

தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத்தில் சட்ட மேலவை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

விரைவில் சட்ட மேலவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள பட்டதாரிகளும் (பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்) தங்களது சார்பாக சில உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உரிமை பெற்றுள்ளனர்.

அப்ஸலுல் உலமா பட்டம் பெற்ற ஆலிம்களும், M.A. (அரபிக்) பட்டம் பெற்ற பட்டதாரி ஆலிம்களும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர் ஆவர்.

இது சம்பந்தமான அரசு அறிவிப்பை கீழே வாசியுங்கள்.


நீங்கள் அப்ஸலுல் உலமா பட்டம் பெற்றிருந்தாலோ அல்லது வேறு ஏதாவது டிகிரி பெற்றிருந்தாலோ தேர்தலில் வாக்களிக்க வேண்டுமெனில் உங்கள் பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தை அணுகி இதற்கான விண்ணப்பத்தை பெற்று, அதை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்துக் கொடுத்தால் நீங்களும் சட்ட மேலைவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும். உங்களது சார்பாக ஒருவரை சட்ட மேலவைக்கு தேந்தெடுக்க முடியும்.

இத்தகவலை உங்களைச் சார்ந்தவர்களுக்கு மின்னஞ்சல் / வலைப்பூ / இணையதளம் / செய்தி ஊடகம் / தொலைகாட்சி / சொற்பொழிவு / நிகழ்ச்சி / தொலைபேசி / தொலைநகல் வாயிலாக தெரிவியுங்கள்.

நன்றி! வஸ்ஸலாம்.

தகவல் உதவி: கோவை மவ்லவீ அ. அப்துல் அஜீஸ் பாகவீ & காயல்பட்டினம் மவ்லவீ சுல்தான் சலாஹுத்தீன் மழாஹிரி

பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A.,
பொதுச் செயலாளர்,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),

துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்கள்: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group

Tuesday, September 21, 2010

K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்'

குவைத்தில் செயற்படும் இந்திய கல்வி நிலையங்கள் / பள்ளிக்கூடங்களின் புது கல்வியாண்டின் தொடக்கமாகவும், குவைத் மண்ணில் வாழும் நம் சகோதரர்களின் கல்வித் தாகத்தை தீர்ப்பதற்காகவும், இந்திய இஸ்லாமியர்களின் கல்வி நிலை குறித்த உண்மைத் தகவல்கள், எதிர்கால உள்நாடு / வெளிநாடு கல்வி பற்றிய ஓர் அலசல், என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? எப்போது படிக்கலாம்? ஆகியவற்றின் விரிவான விளக்கங்கள், கல்வி உதவித் தொகை குறித்த ம(றை)றக்கப்பட்ட உண்மைகள் போன்றவற்றை குறித்து மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கும், அனைவரும் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும், சந்தேகங்களில் தெளிவு பெறுவதற்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' கீழ்க்கண்ட முறையில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகம் ஆகியற்றின் ஆதரவில் நடைபெற்றன. அல்ஹம்து லில்லாஹ்...

முதல் நாள் நிகழ்ச்சி:


16.09.2010 வியாழக்கிழமை இரவு 7:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10:00 மணி வரை குவைத் ஃபஹாஹீல் பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் நடைபெற்றது.

சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் கல்விக் குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் ஜலீப் இண்டிகிரேடட் இந்தியன் பள்ளியின் இணைப் பேராசிரியரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD., அவர்களும், சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., அவர்களும் சிறப்புரையாற்றினர்.

சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ காரீ எச்.எம். அப்துர் ரஹ்மான் மழாஹிரி அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி:

17.09.2010 வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து 10:00 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் நடைபெற்றது.

சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் மூத்த கல்விக் குழு உறுப்பினரும், குவைத் யுனிவர்ஸல் அமெரிக்கன் கலாசாலையின் கல்வியியல் ஆலோசகரும், குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஓட்டி (பைலட்) பயிற்சியாளரும், சிறந்த மனோதத்துவ அறிஞருமான பேராசிரியர் எம். அப்துர் ரஹீம் M.A., M.Ed., QTIC, அவர்களும், சங்கத்தின் கல்விக் குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் ஜலீப் இண்டிகிரேடட் இந்தியன் பள்ளியின் இணைப் பேராசிரியரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD., அவர்களும் சிறப்புரையாற்றினார்.

சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இரண்டு நிகழ்ச்சிகளிலும் பெண்கள் உட்பட ஏறக்குறைய 150 சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கல்வி குறித்து எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் அளிக்கப்பட்டன. கல்வி குறித்த தகவல்களும் பார்வையாளர்களால் பரிமாறி கொள்ளப்பட்டன. அனைவருக்கும் தேநீர் வசதியும், பெண்களுக்கு தனியிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.

சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்றினார்.

இச்சிறப்பு மிகு நிகழ்ச்சிகளில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் திருக்குர்ஆன் விவகாரங்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் இலவச திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் குறித்த தகவல்கள் அறிவிப்பு செய்யப்பட்டது. விண்ணப்பப் படிவங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

மேலதிக விபரங்களுக்கு...
துரித சேவை அலைபேசி எண் : (+965) 97 87 24 82
அதிகாரப்பூர்வ இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல் முகவரிகள் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹு குழமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

“Kuwait Tamil Islamic Committee (K-Tic)” Conducted 2 Day Programs on "Educational Awareness Camp" and "Exchanges of Thoughts" in Tamil


Kuwait Tamil Islamic Committee (K-Tic), a non-profit socio welfare organization of Tamil speaking Muslim community in Kuwait, (established in 2006 - registered with Indian Embassy of Kuwait and also with Administration of Grand Mosque, Kuwait Ministry of Awqaf and Islamic Affairs).

K-Tic has a impressive name among the socio-welfare organizations in Kuwait and Gulf countries whose benevolent works and enlightening activities and conserving Islamic uniqueness and also well known with the thousands of Indians especially all Tamil speaking people in Kuwait .

K-Tic arranged two outstanding programs on "Educational Awareness Camp" and "Exchanges of Thoughts" in Tamil Language for Tamil Community

The first program was on September 16, 2010 Thursday @ 7:30pm after Ishaa Prayer at Fahaheel - Masjid Majeed Al Hilal Al Othaibee.

Prof. Dr. M. Abdul Hameed M.Sc., M.Phil, B.Ed., PhD., (Secretary, Education Wing, K-Tic / Senior Teacher and Administrative Officer, Indian Integrated School, Jaleeb, Kuwait / Trustee, Shafi Educational Trust, Thirunelveli, Tamilnadu, S.India and Moulavee Afzalul Ulamaa Ash-Shaikh A.B. Khaleel Ahmed Baaqavee M.A., (General Secretary) gave valuable lecture on education.

The program was presided over by Moulavee Haafiz Qaari Ash-Shaikh A.R. Mohamamed Ibraheem Manbayi (Vice President) and The Dua made by Moulavee Qaari Ash-Shaikh H.M. Abdur Rahman Mazhahiri (Member, Scholars (Jama'athul Ulamaa) Wing).

The second program was on September 17, 2010 Friday @ 7:30pm after Ishaa Prayer at Kuwait City - Masjid Al Shaaya, Near Mirqab KPTC Bus Terminal.

Prof. A. Abdur Raheem M.A., M.Ed., QTIC, (Senior Member, Education Wing, K-Tic / Advisor, Kuwait Universal American School, Hawally, Kuwait / Pilot Instructor, Kuwait Airways, Kuwait) and Prof. Dr. M. Abdul Hameed M.Sc., M.Phil, B.Ed., PhD., (Secretary, Education Wing, K-Tic / Senior Teacher and Administrative Officer, Indian Integrated School, Jaleeb, Kuwait / Trustee, Shafi Educational Trust, Thirunelveli, Tamilnadu, S.India) presented the highlights and importance of education.

The program was presided over by Moulavee Al-Hafiz Qari Al-Haaj Ash-Shaikh M. Muhammed Nizamudheen Baaqavee (Vice President, K-Tic) and The Dua made by Moulavee Haafiz Qaari Ash-Shaikh A.R. Mohamamed Ibraheem Manbayi (Vice President).

Both the conference was anchored, convened, inaugurated & listed by Moulavee Afzalul Ulamaa Ash-Shaikh A.B. Khaleel Ahmed Baaqavee M.A., (General Secretary), welcome address by Al-Haaj A.K.S. Abdul Nazar (Dy. Gen. Secretary) and vote of thanks by Al Haj H. Mohammed Nasar (Dy. Treasurer).

Before concluding the programs at 9.30pm., a questionnaire section was conducted. All speakers replied on questions and doubts on Education, Job and scholarship position / situation in Tamilnadu and India . The spectators requested K-Tic to carryout more such camps which will be very useful for the community.

Separate seating was arranged for ladies and tea was served at the both programs.

Further, information & forms were presented for the Free Al-Quran Classes arranged in co-ordination with Kuwait Ministry of Awqaf & Islamic Affairs.

For more details please contact to K-Tic's Hotline (+965) 97872482, for more Tamil and English News and Event Photos… please visit our official website: www.k-tic.com, for sending your valuables suggestions please mail to: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com, for joining the Yahoo Group: http://groups.yahoo.com/group/K-Tic-group.

Tuesday, September 14, 2010

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 'கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வு'

குவைத்தில் செயற்படும் இந்திய கல்விக்கூடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களின் புது கல்வியாண்டின் தொடக்கமாகவும், குவைத் மண்ணில் வாழும் நம் சகோதரர்களின் கல்வித் தாகத்தை தீர்ப்பதற்காகவும், இந்திய இஸ்லாமியர்களின் கல்வி நிலை குறித்த உண்மைத் தகவல்கள், எதிர்கால உள்நாடு மற்றும் வெளிநாடு கல்வி பற்றிய ஓர் அலசல், என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? எப்போது படிக்கலாம்? ஆகியவற்றின் விரிவான விளக்கங்கள், கல்வி உதவித் தொகை குறித்த ம(i)றக்கப்பட்ட உண்மைகள் போன்றவற்றை குறித்து மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கும், அனைவரும் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும், சந்தேகங்களில் தெளிவு பெறுவதற்கும் 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வு' கீழ்க்கண்ட முறையில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ்.

முதல் நாள் நிகழ்ச்சி:

இன்ஷா அல்லாஹ் 16.09.2010 வியாழக்கிழமை மாலை 7:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல், கத்ஆ 7, பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா) பள்ளி' பள்ளிவாசலில் நடைபெறும்.

சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு முகாமில் சங்கத்தின் கல்விக்குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் ஜலீப் இண்டிகிரேடட் இந்தியன் பள்ளியின் இணைப் பேராசிரியரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD., அவர்களும், சங்கத்தின் பயிற்சி மற்றும் வழிகாட்டல் குழு செயலாளர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் எம்.மஹ்பூப் பாஷா ரஷாதீ ஆகியோர் சிறப்புரையாற்றுவதுடன் கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க இருக்கின்றனர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி:

இன்ஷா அல்லாஹ் 17.09.2010 வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (உர்தூ குத்பா பள்ளி - KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில்)' பள்ளிவாசலில் நடைபெறும்.

சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு முகாமில் சங்கத்தின் கல்விக்குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் ஜலீப் இண்டிகிரேடட் இந்தியன் பள்ளியின் இணைப் பேராசிரியரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD., அவர்களும், சங்கத்தின் கல்விக் குழு உறுப்பினரும், குவைத் யுனிவர்ஸல் அமெரிக்கன் கலாசாலையின் கல்வியியல் ஆலோசகரும், குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஓட்டி (பைலட்) பயிற்சியாளரும், சிறந்த மனோதத்துவ அறிஞருமான பேராசிரியர் எம். அப்துர் ரஹீம் M.A., M.Ed., QTIC, ஆகியோர் சிறப்புரையாற்றுவதுடன் கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க இருக்கின்றனர்.

சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., தொகுத்து வழங்க இருக்கும் இச்சிறப்புமிகு முகாம்களில் இஸ்லாமிய பொது அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும் வழங்கப்படும். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளிலும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் திருக்குர்ஆன் விவகாரங்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்திருக்கும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பின் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்யப்படும். துஆவுடன் இன்ஷா அல்லாஹ் இனிதே நிகழ்ச்சிகள் நிறைவுபெறும்.

இச்சிறப்புமிகு நிகழ்வுகளில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு...

துரித சேவை அலைபேசி எண் : (+965) 97 87 24 82

அதிகாரப்பூர்வ இணையதளம் : www.k-tic.com

மின்னஞ்சல் முகவரிகள் : q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com

யாஹு குழமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

நன்றி. வஸ்ஸலாம். செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Wednesday, September 8, 2010

யாருக்குப் பெருநாள்?

யாருக்குப் பெருநாள்?
  • உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை.
  • பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை.
  • காலையில் எழுந்து டீ அல்லது காஃபி
  • குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும்...
  • என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை.
  • புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும்
  • என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை.
இவருக்குத்தான் இனிய பெருநாள்...!
  • தன் ஆணவத்தை அடக்கி
  • அலட்சியப் போக்கை அழித்து
  • பகலில் பட்டினி கிடந்து
  • இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு
  • பசி, தாகத்தால் இச்சையை வென்று
  • இறை கடமைகளை நிறைவேற்றி
  • தானத்தால் ஏழைகளின் கண்களை திறந்த
உண்மை முஸ்லிமுக்குத்தான் பெருநாள்...!
  • வறியவர்களின் தேவைகளை கவனித்து
  • பட்டினியையும், பசியையும் அடக்கி,
  • நோன்பினால் ஈமானை பலப்படுத்தி
  • ஆன்மிக பலத்தை நிலை நாட்டி
  • ஒரு மாத கடுஞ்சோதனையை வென்று
  • இறைவனுக்காக நோன்பிருந்த
  • இறைமறையை ஓதி உணர்ந்த
  • இறைகடமைகளை நிறைவு செய்த
உண்மை முஃமினுக்குத்தான் உன்னத பெருநாள்...!
  • ஏழைவரி(ஜகாத்)யை முறையாக அளித்து
  • கருமித்தனத்தை அடியோடு ஒழித்து
  • சிறியவர்களை போற்றி - பாராட்டி
  • பெரியவர்களை மதித்து நடந்து
  • அறிஞர்களுடன் பண்புடன் நடந்து
  • செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு
  • இனி பாவமே செய்யமாட்டேன்
  • என்ற உறுதி கொண்ட
உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!
  • எனது தொழுகை அல்லாஹ்வுக்கே!
  • எனது தியாகச் செயல் அல்லாஹ்வுக்கே!
  • எனது பொதுப்பணி அல்லாஹ்வுக்கே!
  • எனது வாழ்வு அல்லாஹ்வுக்கே!
  • எனது மரணம் அல்லாஹ்வுக்கே!
  • என்று சத்தியப் பிரமாணம் எடுத்த
உண்மையளர்களுக்குத்தான் உண்மைப் பெருநாள்...!

உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ஈகைப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்!


பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A (அரபிக்)., M.A (தத்துவமும் சமயமும்).,

அலைபேசி: (+965) 66 64 14 34

மின்னஞ்சல்: abkaleel@gmail.com / abkaleel1@gmail.com / abkaleel@yahoo.com / khaleel_baaqavee@yahoo.co.in

பொதுச் செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

கௌரவ தலைவர், குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA)
இணை ஆசிரியர், K-TIc பிறை செய்தி மடல், குவைத்
ஆசிரியர் குழாம், www.mypno.com / www.k-tic.com
நிறுவனர், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய அறக்கட்டளை (PIT)

வலைப்பூக்கள்: www.khaleel-baaqavee.blogspot.com / www.khaleelbaaqavee.blogspot.com / www.ulamaa-pno.blogspot.com / www.608502.blogspot.com / www.mypno.blogspot.com / www.lalpetexpress.blogspot.com / www.pinnaijaffar.blogspot.com / www.ppettai.blogspot.com / www.ulamaa-chidambaram.blogspot.com / www.aimaan-pno.blogspot.com / www.news-portonovo.blogspot.com / www.mammsm.blogspot.com / www.ismailpno.blogspot.com

Monday, August 9, 2010

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!
பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A
  • அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்!
  • ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!
  • இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!
  • ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!
  • உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்!
  • ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்!
  • எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்!
  • ஏழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்!
  • ஐயங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்!
  • ஒற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்!
  • ஓரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்...

நம்மை நோக்கி தன் ஒளிக்கதிர்களை பதிக்க விரைவில் வர இருக்கின்றது.

  • சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பக்கதிர்கள் நம்மை தாக்க வரும்போது நிழல் தேடி அலைவது போல் நம் பாவங்களை கருக வைக்கும் தீப்பிழம்பாய் ரமழான் வருகிறது. அருள்மறையை அருளிய அருளாளனின் அன்பு மாதம் நம்மை அரவணைத்துச் செல்ல அண்மையில் வந்துகொண்டிருக்கிறது.
  • ஏக வல்லோன் அல்லாஹ்விடம் நெருங்க வைக்கும் மேலதிக வணக்க வழிபாடுகள் செய்ய வழிவகுக்கும் வரப்பிரசாதம் இந்த ரமழான்.
  • இறை நம்பிக்கைக் கொண்டோர் தம் உள்ளங்களால் எண்ணிய அனைத்து நற்செயல்களுக்கும் வழிதிறக்கும் அற்புத மாதம்.
  • இறைவனிடம் அருள் வேண்டும் முதல் பத்து தினங்களை உள்ளடக்கிய அருள் மாதம் அழகாக வருகின்றது.
  • பாவ மன்னிப்பு கோரும் நெஞ்சங்களில் பால்வார்க்கும் புண்ணிய மாதம் இரண்டாம் பத்து தினங்களுடன் புதையலாக வருகின்றது.
  • நரக நெருப்பின் விடுதலையை வேண்டி நிற்கும் நல்லோர்களின் நம்பிக்கை மாதம்,
  • சுவனத்தில் நுழைய துடிக்கும் சுந்தர நபிகளின் உம்மத்துகள் சுற்றும் சூழ காண துடிக்கும் சூப்பர் மாதம்

முத்தான மூன்றாம் பத்து தினங்களுடனே முன்னறிவிப்புடன் வருகின்றது.

  • உள்ளத்தால் அன்பை விதைத்து, உடலால் பணிவை வெளி கொணர்ந்து மக்களிடம் கருணையை அறுவடை செய்யும் காலம் ரமழான் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
  • ஆன்மீக பயிற்சிக்கு அடிகோலும் அற்புத வாய்ப்பை அள்ளி வழங்கிடும் மாதம்!
  • இறைவனின் வற்றாத கருணையான ரஹ்மத்தையும், ஊற்றுக்கண்ணாக விளங்கும் பரக்கத்தையும் ஒருசேர வாரி வழங்கிடும் வள்ளல் மாதம்.
  • செய்த குற்றங்கள் சிறியதாயினும், பெரியதாயினும் மன்னிப்பின் வாசல் திறக்கப்பட்டு பாவிகளுக்கு பாவமன்னிப்பு பகிர்ந்திடும் படைத்தவனின் மாதம்.
  • நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற நம்முடைய இருகரமேந்திய பிரார்த்தனை அவசியம், அப் பிரார்த்தனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உடனடியாக பதிலளிக்கப்படும் பண்புள்ள மாதம்.
  • நாம் படைக்கப்படுவதற்கு முன்னர், மனிதனையா படைக்கப் போகிறாய்? என்று ஆச்சரிய வினா தொடுத்த வானவர்கள் நம் செயல்களைக் கண்டு, வியந்து இறைவனிடம் பெருமை பாராட்டி பெருமிதப்படுத்தும் பேருள்ள மாதம்.
  • நம்மை வழிகெடுக்கும் நாசகார, தீய சக்திகளான ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு கொட்டிலில் அடைக்கப்படும் காருண்ய மாதம்.
  • இணையில்லா இறைவனின் எல்லையில்லா கூலி வழங்கப்படும் மாதம்.
  • நோன்பாளிகள் மட்டும்... என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டுள்ள உயர்தர சுவனத்தில் நாம் நோன்பாளி என்ற பெருமையுடன் நுழைய வைக்கும் மாதம்.
  • சுகந்த காற்று வீசும் வசந்த கால திறப்பு போல சுவனக்காற்றை வீச வானங்கள் மற்றும் சுவனங்களின் திறப்பு விழா நடைபெறும் விழாக்கா(கோ)லம்.
  • கோடைகால வெப்பத்தையே தாங்க முடியாத நமக்கு நரகத்தின் கொடுமையை தாங்க முடியுமா? அதற்கு முடிவுகட்டும் விதமாக முடிவில்லாத முன்னவன் அல்லாஹ்வின் முன்னேற்பாடு தான் இந்த ரமழான். ஆம்! இந்த வசந்த காலத்தில் நரகச்சூடு நம்மைத் தொட அனுமதியில்லை. எங்கும் எப்போதும் சுகம்! அதுதான் இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம்!! அதற்காகத்தான் இந்த மாதத்தில் மூடப்படும் நரகம்!!!
  • ஓராயிரம் இரவுகள் விழித்திருந்தால்தான் ஒருசில நன்மைகளை பெற முடியும் என்ற வாழ்க்கைச் சூழலில் ஓரிரவு விழித்திருந்தாலே போதும் ஓராயிரம் இரவுகள் செய்த செயல்களுக்குண்டான நன்மைகளை சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற சுபச் செய்தியுடன் லைல(த்)துல் கத்ர் என்ற புதையலை தன்னுள் வைத்திருக்கும் அருள் சுரங்கம்.
  • வாடிய பயிரை கண்டபோது வாடுவதை விட அதற்கு தண்ணீர் வார்ப்பது மேலான செயல் என்பது போல வறியோருக்கும், எளியோருக்கும், இல்லாதோருக்கும் வாரி வழங்கி கொடைத்தன்மையையும், வள்ளல் குணத்தையும் வாஞ்சையுடன் கற்றுத்தரும் வளமிகு மாதம்.
  • நாம் மட்டும் நன்மைகள் பல செய்து, தீமைகளை விட்டும் தவிர்ந்திருந்தால் போதுமா? பிறருக்கும் நல்லவற்றை போதிக்க வேண்டாமா? தீமையை விட்டும் தடுக்க வேண்டாமா? அந்தப் புனிதப் பணியை வழங்கும் பயிற்சிக்களம்தான் இந்த ரமழான்.
  • அடுத்தவருக்கு அநீதி இழைத்தல் ஆபத்தானது என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தும் அழகிய மாதம்.
  • பிறரின் தேவைகளை அறிந்து முடிந்தளவு உதவிகள் புரிய உள்ளத்தில் உதவிப்பண்பை ஊற்றெடுக்க வைக்கும் உன்னத மாதம்.
  • கஸ்தூரி மணம் கமழும் மணப்பொருளை விட நோன்பாளியின் வாய் வாடை வல்லோன் விரும்பும் வாசனை என்பதை வலியுறுத்தும் வசந்த மாதம்.
  • உலக காரியங்களில் போட்டியிட்டால் வெற்றியாளர் ஒருவரே! மற்ற அனைவரும் தோல்வியுற்றோர் என்பது நாம் அறிந்த நியதி. ஆனால், இம்மாதத்தில் நற்செயல்களில் போட்டியிடுவோர் அனைவரும் வெற்றியாளர்கள் என்பதும், தோல்வியில்லா வாழ்க்கையும், துவண்டு போகாத நிம்மதியும் கிடைக்கும் என்பதும் வெற்றியளிக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதி என்பதை உணர்த்தும் மாதம்.
  • வழிபாடுகள் என்ற குறைவான மூலதனம். இறைபொருத்தம் மற்றும் சுவனம் என்ற இலாபம் மட்டுமே! வேறு எந்தவித நஷ்டமும் இல்லை என்ற புதுவித வியாபார உத்தியை கற்றுக்கொடுக்கும் கல்வி மாதம்.
இறுதியாக...
  • இறையச்சம் என்னும் தக்வாவை நம் உள்ளங்களில் உறையவைக்க உண்மையாளன் அல்லாஹ் உம்மி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத்திற்கு வகுத்தளித்த செயல்முறை திட்டம்.

அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டியது நோன்பு நோற்பது மட்டும் தானா...?

  • இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து. நன்மைகளை எதிர்பார்த்து நோன்பு நோற்க வேண்டும். அதே அடிப்படையில் இரவு வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்விரண்டு செயற்பாடுகளும் நம்முடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
  • ஐவேளை தொழுகைகளையும் பள்ளிவாசலுக்கு சென்று கூட்டா(ஜமாஅத்தா)க நிறைவேற்ற வேண்டும். இது கூட்டு வாழ்க்கை முறையையும். சகோதர பாசத்தையும் பலப்படுத்த உதவி செய்யும்.
  • தினந்தோறும் திருக்குர்ஆனை உள்ளச்சத்துடன். பொருள் விளங்கி, ஓத வேண்டிய முறையில் ஓத வேண்டும். இது இறைவனின் கருணையும். மன நிம்மதியும் ஏற்பட வழிவகுக்கும்.
  • இஸ்லாமிய அறிவை கற்றுக்கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். இது ஈருலுக வெற்றிக்குண்டான பாதையை திறந்து வைக்கும்.
  • இரவு வணக்கம் என்ற தராவீஹ் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகளை அதிகமாக தொடர்ந்து தொழுது வர வேண்டும். இவை இறைவனின் நெருக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த வழிமுறையாகும்.
  • உறவுமுறையை பேணி வாழ வேண்டும். இது குடும்ப சீரமைப்பிற்கும். சொந்தங்கள் சேர்ந்து வாழ்வதற்கும் சீரான வழியை காட்டும்.
  • இல்லாருக்கும். எளியோருக்கும் முடிந்த வரை உதவிகள் புரிய வேண்டும். இது பிறர் மீது அன்பு செலுத்துதல் என்ற மேலான குணத்தை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைக்கும்

அன்பின் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளே...! தயாராகுவோம் நாம்...!

  • இறைவழிபாட்டில் திளைத்திருப்போம்! இறைமறை குர்ஆனை ஓதுவதில் மூழ்கியிருப்போம்!
  • வீண் பேச்சுகளை தவிர்ந்திருப்போம்! வீணாணவைகளை விட்டும் ஒதுங்கியிருப்போம்!
  • பகல் முழுவதும் பசித்திருந்து நோன்பிருப்போம்! இரவு முழுவதும் விழித்திருந்து இறையைத் தொழுவோம்!
  • புனித ரமழானில் புதையலைத் தேடிப் புறப்படுவோம்! நாளை மறுமையில் பொன்னான வாழ்வை சென்றடைவோம்!
  • இங்கே நாள்தோறும் நன்மைகள் பல புரிவோம்! ஈருலகிலும் நாயன் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்!
  • அல்குர்ஆனின் வழிமுறையில் செல்வோம்! அல்லாஹ்வின் அளவிலா அருளைப் பெறுவோம்!
  • சுன்னத்தைப் பேணி சிறப்பாக வாழ்வோம்! சுகந்தரும் சுவனத்தில் சுதந்திரமாக நுழைவோம்!

உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்!

பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A (அரபிக்)., M.A (தத்துவமும் சமயமும்).,
அலைபேசி: (+965) 66 64 14 34
மின்னஞ்சல்: abkaleel@gmail.com / abkaleel1@gmail.com / abkaleel@yahoo.com / khaleel_baaqavee@yahoo.co.in
பொதுச் செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
கௌரவ தலைவர், குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA)
இணை ஆசிரியர், K-TIc பிறை செய்தி மடல், குவைத்
ஆசிரியர் குழாம், www.mypno.com / www.k-tic.com
நிறுவனர், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய அறக்கட்டளை (PIT)


குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வெளியிட்ட புனித ரமழான் (ஹிஜ்ரீ 1431) கால அட்டவணை / Holy Ramadhan Calendar Hijri 1431 for Kuwait

அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே!

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வெளியிட்ட குவைத் நாட்டிற்கான 2010 ஆண்டிற்கான புனித ரமழான் (ஹிஜ்ரீ 1431) கால அட்டவணை.

இதோ தங்களின் மேலான பார்வைக்கும், பயன்பாட்டிற்கும்....
குவைத்தில் வசிப்பவர்கள் நாட்காட்டியை பெற்றுக்கொள்ள சங்கத்தை உடனே தொடர் கொள்ளவும்.

துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்கள்: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
இணையதளம்: www.k-tic.com



Dear Brothers & Sisters, We have enclosed a soft copy of K-Tic Holy Ramadhan 1431 Calendar, which we have published recently in Kuwait.

If you are residing in Kuwait, please contact us thru our Hotline : (+965) 97 87 24 82 or Emails: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com or www.k-tic.com
Wassalaam and best regards,
Kuwait Tamil Islamic Committee (K-Tic), Kuwait.

Tuesday, August 3, 2010

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித ரமழான் வரவேற்பு நிகழ்ச்சிகள்!

புனித ரமழான் மாத வருகையொட்டி 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'புனித ரமழான் வரவேற்பு சிறப்பு நிகழ்ச்சிகள்' கீழ்க்கண்ட முறையில் நான்கு இடங்களில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.

முதல் நாள் நிகழ்ச்சி:

அல்லாஹ் 05.08.2010 வியாழக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல், கத்ஆ 7, பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா) பள்ளி' பள்ளிவாசலில் நடைபெறும்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில்... சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ மற்றும் செயலாளர் (ஜமாஅத்துல் உலமா / மார்க்க அறிஞர்கள் குழு) மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் எம்.டி.எம். அஜ்வத் ரைவின்தி லாஹூரி (இலங்கை) ஆகியோர் புனித ரழமான் குறித்த தலைப்புகளில் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி:

அல்லாஹ் 06.08.2010 வெள்ளிக்கிழமை இரவு 8:00 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (உர்தூ குத்பா பள்ளி - KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில்)' பள்ளிவாசலில் நடைபெறும்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில்... சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ மற்றும் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., ஆகியோர் புனித ரழமான் குறித்த தலைப்புகளில் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய பொது அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும் வழங்கப்படும். இவ்வருடத்திற்கான புனித ரமழான் (ஹிஜ்ரீ 1430 / ஈஸவீ 2010) நோன்பு கால அட்டவணையும் வெளியிடப்படும். பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது நிகழ்ச்சி:

06.08.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு குவைத், ஹவல்லி பகுதியில் உள்ள 'அஷ்-ஷைக்கா ஸபீக்கா' பள்ளிவாசலில் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ புனித ரமழான் குறித்து சிறப்புறையாற்ற இருக்கின்றார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக 200 வாரங்களை கடந்து இப்பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நான்காவது நிகழ்ச்சி:

06.08.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு குவைத், அப்பாஸிய்யா பகுதியில் உள்ள 'அல்-அன்பயீ' பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ புனித ரழமான் குறித்து சிறப்புறையாற்ற இருக்கின்றார்.

கடந்த ஓராண்டாக இப்பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட நான்கு நிகழ்ச்சிகளிலும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் திருக்குர்ஆன் விவகாரங்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்திருக்கும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பின் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்யப்படும். துஆவுடன் இன்ஷா அல்லாஹ் இனிதே நிகழ்ச்சிகள் நிறைவுபெறும்.

இச்சிறப்புமிகு நிகழ்வுகளில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு...
துரித சேவை அலைபேசி எண் : (+965) 97 87 24 82
அதிகாரப்பூர்வ இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல் முகவரிகள் : q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com
யாஹு குழமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.