Tuesday, August 3, 2010

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித ரமழான் வரவேற்பு நிகழ்ச்சிகள்!

புனித ரமழான் மாத வருகையொட்டி 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'புனித ரமழான் வரவேற்பு சிறப்பு நிகழ்ச்சிகள்' கீழ்க்கண்ட முறையில் நான்கு இடங்களில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.

முதல் நாள் நிகழ்ச்சி:

அல்லாஹ் 05.08.2010 வியாழக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல், கத்ஆ 7, பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா) பள்ளி' பள்ளிவாசலில் நடைபெறும்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில்... சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ மற்றும் செயலாளர் (ஜமாஅத்துல் உலமா / மார்க்க அறிஞர்கள் குழு) மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் எம்.டி.எம். அஜ்வத் ரைவின்தி லாஹூரி (இலங்கை) ஆகியோர் புனித ரழமான் குறித்த தலைப்புகளில் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி:

அல்லாஹ் 06.08.2010 வெள்ளிக்கிழமை இரவு 8:00 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (உர்தூ குத்பா பள்ளி - KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில்)' பள்ளிவாசலில் நடைபெறும்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில்... சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ மற்றும் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., ஆகியோர் புனித ரழமான் குறித்த தலைப்புகளில் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய பொது அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும் வழங்கப்படும். இவ்வருடத்திற்கான புனித ரமழான் (ஹிஜ்ரீ 1430 / ஈஸவீ 2010) நோன்பு கால அட்டவணையும் வெளியிடப்படும். பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது நிகழ்ச்சி:

06.08.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு குவைத், ஹவல்லி பகுதியில் உள்ள 'அஷ்-ஷைக்கா ஸபீக்கா' பள்ளிவாசலில் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ புனித ரமழான் குறித்து சிறப்புறையாற்ற இருக்கின்றார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக 200 வாரங்களை கடந்து இப்பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நான்காவது நிகழ்ச்சி:

06.08.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு குவைத், அப்பாஸிய்யா பகுதியில் உள்ள 'அல்-அன்பயீ' பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ புனித ரழமான் குறித்து சிறப்புறையாற்ற இருக்கின்றார்.

கடந்த ஓராண்டாக இப்பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட நான்கு நிகழ்ச்சிகளிலும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் திருக்குர்ஆன் விவகாரங்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்திருக்கும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பின் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்யப்படும். துஆவுடன் இன்ஷா அல்லாஹ் இனிதே நிகழ்ச்சிகள் நிறைவுபெறும்.

இச்சிறப்புமிகு நிகழ்வுகளில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு...
துரித சேவை அலைபேசி எண் : (+965) 97 87 24 82
அதிகாரப்பூர்வ இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல் முகவரிகள் : q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com
யாஹு குழமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Thursday, July 15, 2010

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்!

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த 'மாபெரும் இஸ்ரா / மிஃராஜ்' சிறப்பு நிகழ்ச்சிகள் 'அண்ணல் நபியின் விண்ணுலக பயணம் - நன்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!!' என்ற கருப்பொருளில் கீழ்க்கண்ட முறையில் நான்கு இடங்களில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற்றன. அல்ஹம்து லில்லாஹ்...

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாபெரும் விண்ணுலக யாத்திரையின் நினைவாக நடத்தப்பட்டன.

முதல் நிகழ்ச்சி:



08.07.2010 வியாழக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத் ஃபஹாஹீல் பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் நடைபெற்றது.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில்... இளவல் எம்.என்.அப்துல் பாஸித் கிராஅத் ஓதினார். சங்கத்தின் துணைத் தலைவர்கள் மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ மற்றும் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ ஆகியோர் இஸ்ரா, மிஃராஜ் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா குறித்த முழுமையான வரலாறு ஆகிய தலைப்புகளில் சிறப்புரையாற்றினர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இரண்டாவது நிகழ்ச்சி:

09.07.2010 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் நடைபெற்றது.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில்... இளவல் எம்.என். அப்துல் லத்தீஃப் கிராஅத் ஓதினார். சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைஃக் எச்.எம். அப்துர் ரஹ்மான் மழாஹிரி மற்றும் சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் ஆகியோர் இஸ்ரா, மிஃராஜ் நிகழ்வின் அன்பளிப்பு, இஸ்லாமியர்களின் கடமைகள் ஆகிய தலைப்புகளில் சிறப்புரையாற்றினர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இரண்டு நிகழ்ச்சிகளிலும் இஸ்லாமிய பொது அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் அல்ஹாஜ் எம். ஜாஹிர் ஹுஸைன் நன்றியுரையாற்றினார்.

மூன்றாவது மற்றும் நான்காவது நிகழ்ச்சிகள்:

09.07.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு கீழ்க்ண்ட இரண்டு பள்ளிவாசல்களில் இஸ்ரா ஃ மிஃராஜ் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குவைத், ஹவல்லி பகுதியில் உள்ள 'அஷ்-ஷைக்கா ஸபீக்கா' பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ சிறப்புறையாற்றினார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக 200 வாரங்களை கடந்து இப்பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

குவைத், அப்பாஸிய்யா பகுதியில் உள்ள 'அல்-அன்பயீ' பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ சிறப்புறையாற்றினார்.

கடந்த ஓராண்டாக இப்பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட நான்கு நிகழ்ச்சிகளிலும் சமீபத்தில் மரணமடைந்த இலங்கையைச் சேர்ந்த மாபெரும் அறிஞர் மவ்லானா நியாஜ் மவ்லவீ அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு அவர்களின் மறுமை வெற்றிக்காக துஆ செய்யப்பட்டது.

குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் திருக்குர்ஆன் விவகாரங்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் குறித்த தகவல்களும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அறிவிப்பு செய்யப்பட்டது. விண்ணப்பப் படிவங்களும் விநியோகம் செய்யப்பட்டது.

மேலதிக விபரங்களுக்கு... துரித சேவை அலைபேசி எண் : (+965) 97 87 24 82 - அதிகாரப்பூர்வ இணையதளம் : www.k-tic.com - மின்னஞ்சல் முகவரிகள் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com - யாஹு குழமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Tuesday, July 6, 2010

குவைத்தில் மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள் - Twin Program on “Isra’a & Mi'raj” – Conference by K-Tic

மாபெரும் இஸ்ரா / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்!
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாபெரும் விண்ணுலக யாத்திரையின் நினைவாக குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற ஒரே தமிழ் இஸ்லாமிய அமைப்பான 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'மாபெரும் இஸ்ரா ஃ மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்'...

'அண்ணல் நபியின் விண்ணுலக பயணம் - நன்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!!' என்ற கருப்பொருளில் கீழ்க்கண்ட முறையில் இரண்டு இடங்களில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.

முதல் நாள் நிகழ்ச்சி:

இன்ஷா அல்லாஹ் 08.07.2010 வியாழக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல், கத்ஆ 7, பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா) பள்ளி' பள்ளிவாசலில் நடைபெறும்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில்... சங்கத்தின் கொள்கை பரப்புக் குழு உறுப்பினர் மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ, பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைஃக் எம். மஹ்பூப் பாஷா ரஷாதி மற்றும் சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைஃக் எச்.எம். அப்துர் ரஹ்மான் மழாஹிரி ஆகியோர் இஸ்ரா, மிஃராஜ் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா குறித்த முழுமையான வரலாறு போன்ற தலைப்புகளில் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி:

இன்ஷா அல்லாஹ் 09.07.2010 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (உர்தூ குத்பா பள்ளி - KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில்)' பள்ளிவாசலில் நடைபெறும்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில்... சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு மூத்த உறுப்பினர்கள் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ, மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் எம்.டி.எம். அஜ்வத் ரைவின்தி லாஹூரி (இலங்கை) மற்றும் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் எஃப். ஷேக் தாவூத் ஸிராஜி ஆகியோர் இஸ்ரா, மிஃராஜ் நிகழ்வின் அன்பளிப்பு, இஸ்லாமியர்களின் கடமைகள் போன்ற தலைப்புகளில் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

இரண்டு நிகழ்ச்சிகளிலும் இஸ்லாமிய பொது அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

சங்கத்தின் செயல் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிற்றுரையாற்றுவார். துஆவுடன் இரண்டு நிகழ்ச்சிகளும் இன்ஷா அல்லாஹ் இனிதே நிறைவுபெறும்.

இச்சிறப்புமிகு நிகழ்வுகளில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

“ Kuwait Tamil Islamic Committee (K-Tic)” arranges "Twin Program on “Isra’a & Mi'raj” – Conference in Tamil"

Kuwait Tamil Islamic Committee (K-Tic), a non-profit socio welfare organization of Tamil speaking Muslim community in Kuwait, (established in 2006 - registered with Indian Embassy of Kuwait and also with Administration of Grand Mosque, Kuwait Ministry of Awqaf and Islamic Affairs).

K-Tic has a impressive name among the socio-welfare organizations in Kuwait and Gulf countries whose benevolent works and enlightening activities and conserving Islamic uniqueness and also well known with the thousands of Indians especially all Tamil speaking people in Kuwait.
K-Tic arranges twin program on “Isra’ & Mi'raj” - Conference in Tamil Language.

Program 1:

Date : Insha Allah July 8, 2010 Thursday @ 6:30pm (after Maghrib Prayer)
Venue: Fahaheel - Masjid Majeed Al Hilal Al Othaibee, Urdu Quthba Masjid, Behind Gulf Mart / Green Tower.

Orators :
1. Moulavee Qaari Ash-Shaikh M. Zainul Aabideen Baaqavee (Senior Member, Islamic Scholars (Jamaathul Ulamaa) Wing).
2. Moulavee Haafiz Qaari Ash-Shaikh M. Mahboob Basha Rashadi (Member, Guidance and Training Wing).
3. Moulavee Qari Ash-Shaikh H.M. Abdur Rahman Mazhahiri (Member, Scholars (Jama'athul Ulamaa) Wing).

Program 2:

Date : Insha Allah July 9, 2010 Friday @ 6:30pm (after Maghrib Prayer).
Venue: Kuwait City - Masjid Al Shaaya, Near Mirqab KPTC Bus Terminal & near to Liberation Tower / Souk Al Wataniya.

Orators :
1. Moulavee Haafiz Qaari Ash-Shaikh A.R. Mohamamed Ibraheem Manbayi (Senior Member, Scholars (Jama'athul Ulamaa) Wing).
2. Moulavee Haafiz Qaari Ash-Shaikh ( Sri Lanka ) M.T.M. Muhammed Ajwad Raivindhi Laahori (Senior Member, Scholars (Jama'athul Ulamaa) Wing).
3. Moulavee Haafiz Qaari Ash-Shaikh F. Sheakh Dawood Siraji (Senior Member, Scholars (Jama'athul Ulamaa) Wing).

A short spontaneous quiz program on the captioned conference title will be held and instant gift will be provided.

Both the program shall be presided by Acting President Moulavee M.S. Mohammed Meera Shah Baaqavee and anchored by Moulavee Afzalul Ulamaa Ash-Shaikh A.B. Khaleel Ahmed Baaqavee M.A., General Secretary.

Separate seating arranged for ladies and dinner will be served at the end of each program.

K-Tic cordially invites everyone to this seminar with their family members, relatives and friends. Also, please pass this information to all Tamil speaking community in Kuwait and take part in this useful seminar.

For further details please contact:
Hotline : (+965) 97 87 24 82
Emails : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
Official Website : www.k-tic.com
Yahoo Group : http: //groups.yahoo.com/group/K-Tic-group

Moulavee M.S. Mohammed Meera Shah Baaqavee, Acting President (99694208)
Moulavee A.B. Khaleel Ahmed Baaqavee, General Secretary (66641434)
Al-Haaj A.K.S. Abdul Nazar, Dy. Gen. Secretary (99430786)
Al-Haaj H. Mohammed Nasar, Joint Treasurer (97302747)
Janaab M. Zahir Hussain, Joint Secretary (97652767)

Thursday, June 24, 2010

குவைத்தில் இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி / “Islamic Lifeology” Seminar by K-Tic

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி!

கடந்த 18.06.2010 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து இரவு 10:00 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில்)' பள்ளிவாசலில் குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற ஒரே தமிழ் இஸ்லாமிய அமைப்பான 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்த 'இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி' சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...சங்கத்தின் செயல் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை இளவல் எஸ். அல் அமீன், திருமறை அல்-குர்ஆன் வசனங்களை கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர், வரவேற்புரையாற்ற, சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க நிகழ்ச்சி இனிதே துவங்கியது.இச்சிறப்புமிகு வாழ்வியல் நிகழ்ச்சியில் சங்கத்தின் ஃபத்வா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள், 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற தலைப்பில் சிறப்புரையாற் றினார். இவர்கள் தமது உரையில், வாழ்வியல் வழிகாட்டல், இஸ்லாம் காட்டும் நெறிமுறைகள், சோதனைகள் ஏற்பட்டால் எதிர்கொள்ளும் வழிமுறைகள் போன்றவற்றை தெளிவாக ஆதாரங்களுடன் குறிப்பிட்டார்கள்.இவர்களைத் தொடர்ந்து சங்கத்தின் கொள்கை பரப்புக் குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ அவர்கள், 'வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். இவர்கள் தமது உரையில், குழந்தை வளர்ப்பு, இளைய சமுதாயத்திற்கான நல்லொழுக்க பயிற்சிகள், குடும்ப வாழ்க்கை முறை போன்றவற்றை விளக்கமாக ஆதாரங்களுடன் குறிப்பிட்டார்கள்.சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்ற, சங்கத்தின் ஜமாஅத்துல் உலமா குழு மூத்த உறுப்பினர் மௌலவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ, துஆ ஓத நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்து லில்லாஹ்...

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் பலர் பங்கேற்று பயனடைந்தனர். பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கு சங்கத்தின் துரித சேவை அலைபேசி எண் (+965) 97872482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும், மேலதிக செய்திகளுக்கும், நிகழ்ச்சியின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.


“Islamic Lifeology” Seminar in Tamil Conducted by “Kuwait Tamil Islamic Committee (K-Tic)”

Kuwait Tamil Islamic Committee (K-Tic), a non-profit socio welfare organization of Tamil speaking Muslim community in Kuwait, (established in 2006 - registered with Indian Embassy of Kuwait and also with Administration of Grand Mosque, Kuwait Ministry of Awqaf and Islamic Affairs).

K-Tic has a impressive name among the socio-welfare organizations in Kuwait and Gulf countries whose benevolent works and enlightening activities and conserving Islamic uniqueness and also well known with the thousands of Indians especially all Tamil speaking people in Kuwait.

Apart from several Special Annual events, K-Tic conducts monthly programs. This month’s program was titled as “Seminar on Islamic Lifeology” and presented at Masjid Al-Shayaa (Near KPTC Bus Terminal & Adjusant Liberation Tower / Souk Al-Wathaniyaa), Mirqab, Kuwait City, which started @ 6:30 pm (after Maghrib Prayer) up to 10:00 pm on June 18, 2010 Friday.

The seminar presided by Moulavi Ash-Shaikh M.S. Mohammed Meera Shah Fazil Baqavi (Acting President) and started with recital / Qira'th from Holy Al-Qur'an by Master S. Al-Ameen, followed by the welcome speech by Al-Haaj A.K.S. Abdul Nazar (Deputy General Secretary), anchored by Moulavee Afzalul Ulamaa Ash-Shaikh A.B. Khaleel Ahmed Baaqavee M.A., (General Secretary).The Islamic Lifeology - detailed in two major topics covered by two scholars – Moulavi Hafiz Qari Ash-Shaikh M. Mohamamed Nizamudh Deen Baqavi (Senior Member, Fatwa Wing) and Moulavi Qari Ash-Shaikh M. Zainul Aabideen Baqavi (Senior Member, Islamic Scholars (Ulamaa) Wing).

Their lecture covered guidance for life in light of Al Quran and Hadiths, how Islam teaches to tackle the problems at the time of depressions, how to teach the children good habits so that their future shall prosper.

The meeting was attended from Tamil speaking community and was beneficent for them and their families. The seminar concluded with vote of thanks by Al-Haaj H. Mohammed Naasar (Deputy Treasurer) and Dua’a by Moulavi Hafiz Qari Ash-Shaikh A.R. Mohamamed Ibraheem Manbayi (Senior Member, Scholars (Jama'athul Ulamaa) Wing). A small supper was arranged and separate area for ladies was also arranged.For more details please contact to K-Tic's Hotline (+965) 97872482, for more Tamil and English News and Event Photos… please visit our official website: www.k-tic.com, for sending your valuables suggestions please mail to: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com, for joining the Yahoo Group: http://groups.yahoo.com/group/K-Tic-group

Hotline : (+965) 97 87 24 82
Emails: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
Official Website: www.k-tic.com
Yahoo Group: http: //groups.yahoo.com/group/K-Tic-group

Thursday, June 17, 2010

இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18.06.2010 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில்)' பள்ளிவாசலில் குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற ஒரே தமிழ் இஸ்லாமிய அமைப்பான 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி' முதல் முறையாக நடைபெற இருக்கின்றது.

இச்சிறப்புமிகு வாழ்வியல் நிகழ்ச்சியில் சங்கத்தின் கொள்கை பரப்புக் குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ அவர்கள் 'வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்' என்ற தலைப்பிலும், சங்கத்தின் ஃபத்வா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள் 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

சங்கத்தின் செயல் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில், சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இரவு சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Tuesday, June 8, 2010

பரங்கிப்பேட்டை மாநகரில் முப்பெரும் விழா!

ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா!
தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி!!

மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்!!!


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் இந்த மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் முப்பெரும் விழா நடைபெற இருக்கின்றது இன்ஷா அல்லாஹ்....

12ந் தேதி சனிக்கிழமையன்று தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி காலை 9.00 மணி முதல் இஷா வரை நடைபெற இருக்கின்றது.

இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அரபுக்கல்லூரிகள் மற்றும் ஹிஃப்ழு மதரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபிக்க இருக்கின்றனர்.

இரண்டாம் நாள் 13 ந் தேதி (13.06.2010) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் லுஹர் வரை உலக அளவிலும், அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்ட கிராஅத் போட்டிகளில் பல பரிசுகளை வென்ற தலை சிறந்த காரீகளின் (காரீ: முறையாக திருக்குர்ஆனை ஓதக்கூடியவர்) மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம் முதல் முறையாக நடைபெற இருக்கின்றது.

பிற்பகல் 1:30 மணி முதல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் திருக்குர்ஆனை முறையாக முழுவதுமாக மனனம் செய்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஹாஃபிழ் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கிராஅத் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.

மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் பெற்றுக் கொள்ளலாம்.








அல்லாஹ்வின் அருள்மறையை, அவனிக்கு வழிகாட்ட வந்த திருமறையை தேனினும் இனிய குரல்களில், உள்ளங்கள் உருகும் வகையில், நம்மை மெய்ச சிலிர்க்கும் முறையில் செவிகள் குளிர ஓதிக்காட்டப்படும் இந்த மாபெரும் கிராஅத் அரங்கிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அல்லாஹ்வின் அருள்மழையில் நனைய வேண்டும் என்றும் போட்டிகளில் பங்குபெறும மாணவச் செல்வங்களின் திறமைகளை நேரில் காணவும், ஹாஃபிழ் பட்டம் பெறும் மாணவர்களுக்கு துஆ செய்யவும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி மற்றும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி நிர்வாகிகள் அழைப்பு விடுக்கின்றனர்.

இந்த அழைப்பை தமிழறிந்த அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

தொடர்புக்கு:

முதல்வர்,
அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி,
ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி,
மீராப்பள்ளித் தெரு, பரங்கிப்பேட்டை - 608502,
கடலூர் மாவட்டம்.
தொலைபேசி: (04144) 25 33 11