Thursday, June 24, 2010

குவைத்தில் இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி / “Islamic Lifeology” Seminar by K-Tic

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி!

கடந்த 18.06.2010 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து இரவு 10:00 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில்)' பள்ளிவாசலில் குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற ஒரே தமிழ் இஸ்லாமிய அமைப்பான 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்த 'இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி' சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...சங்கத்தின் செயல் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை இளவல் எஸ். அல் அமீன், திருமறை அல்-குர்ஆன் வசனங்களை கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர், வரவேற்புரையாற்ற, சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க நிகழ்ச்சி இனிதே துவங்கியது.இச்சிறப்புமிகு வாழ்வியல் நிகழ்ச்சியில் சங்கத்தின் ஃபத்வா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள், 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற தலைப்பில் சிறப்புரையாற் றினார். இவர்கள் தமது உரையில், வாழ்வியல் வழிகாட்டல், இஸ்லாம் காட்டும் நெறிமுறைகள், சோதனைகள் ஏற்பட்டால் எதிர்கொள்ளும் வழிமுறைகள் போன்றவற்றை தெளிவாக ஆதாரங்களுடன் குறிப்பிட்டார்கள்.இவர்களைத் தொடர்ந்து சங்கத்தின் கொள்கை பரப்புக் குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ அவர்கள், 'வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். இவர்கள் தமது உரையில், குழந்தை வளர்ப்பு, இளைய சமுதாயத்திற்கான நல்லொழுக்க பயிற்சிகள், குடும்ப வாழ்க்கை முறை போன்றவற்றை விளக்கமாக ஆதாரங்களுடன் குறிப்பிட்டார்கள்.சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்ற, சங்கத்தின் ஜமாஅத்துல் உலமா குழு மூத்த உறுப்பினர் மௌலவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ, துஆ ஓத நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்து லில்லாஹ்...

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் பலர் பங்கேற்று பயனடைந்தனர். பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கு சங்கத்தின் துரித சேவை அலைபேசி எண் (+965) 97872482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும், மேலதிக செய்திகளுக்கும், நிகழ்ச்சியின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.


“Islamic Lifeology” Seminar in Tamil Conducted by “Kuwait Tamil Islamic Committee (K-Tic)”

Kuwait Tamil Islamic Committee (K-Tic), a non-profit socio welfare organization of Tamil speaking Muslim community in Kuwait, (established in 2006 - registered with Indian Embassy of Kuwait and also with Administration of Grand Mosque, Kuwait Ministry of Awqaf and Islamic Affairs).

K-Tic has a impressive name among the socio-welfare organizations in Kuwait and Gulf countries whose benevolent works and enlightening activities and conserving Islamic uniqueness and also well known with the thousands of Indians especially all Tamil speaking people in Kuwait.

Apart from several Special Annual events, K-Tic conducts monthly programs. This month’s program was titled as “Seminar on Islamic Lifeology” and presented at Masjid Al-Shayaa (Near KPTC Bus Terminal & Adjusant Liberation Tower / Souk Al-Wathaniyaa), Mirqab, Kuwait City, which started @ 6:30 pm (after Maghrib Prayer) up to 10:00 pm on June 18, 2010 Friday.

The seminar presided by Moulavi Ash-Shaikh M.S. Mohammed Meera Shah Fazil Baqavi (Acting President) and started with recital / Qira'th from Holy Al-Qur'an by Master S. Al-Ameen, followed by the welcome speech by Al-Haaj A.K.S. Abdul Nazar (Deputy General Secretary), anchored by Moulavee Afzalul Ulamaa Ash-Shaikh A.B. Khaleel Ahmed Baaqavee M.A., (General Secretary).The Islamic Lifeology - detailed in two major topics covered by two scholars – Moulavi Hafiz Qari Ash-Shaikh M. Mohamamed Nizamudh Deen Baqavi (Senior Member, Fatwa Wing) and Moulavi Qari Ash-Shaikh M. Zainul Aabideen Baqavi (Senior Member, Islamic Scholars (Ulamaa) Wing).

Their lecture covered guidance for life in light of Al Quran and Hadiths, how Islam teaches to tackle the problems at the time of depressions, how to teach the children good habits so that their future shall prosper.

The meeting was attended from Tamil speaking community and was beneficent for them and their families. The seminar concluded with vote of thanks by Al-Haaj H. Mohammed Naasar (Deputy Treasurer) and Dua’a by Moulavi Hafiz Qari Ash-Shaikh A.R. Mohamamed Ibraheem Manbayi (Senior Member, Scholars (Jama'athul Ulamaa) Wing). A small supper was arranged and separate area for ladies was also arranged.For more details please contact to K-Tic's Hotline (+965) 97872482, for more Tamil and English News and Event Photos… please visit our official website: www.k-tic.com, for sending your valuables suggestions please mail to: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com, for joining the Yahoo Group: http://groups.yahoo.com/group/K-Tic-group

Hotline : (+965) 97 87 24 82
Emails: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
Official Website: www.k-tic.com
Yahoo Group: http: //groups.yahoo.com/group/K-Tic-group

Thursday, June 17, 2010

இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18.06.2010 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில்)' பள்ளிவாசலில் குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற ஒரே தமிழ் இஸ்லாமிய அமைப்பான 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி' முதல் முறையாக நடைபெற இருக்கின்றது.

இச்சிறப்புமிகு வாழ்வியல் நிகழ்ச்சியில் சங்கத்தின் கொள்கை பரப்புக் குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ அவர்கள் 'வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்' என்ற தலைப்பிலும், சங்கத்தின் ஃபத்வா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள் 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

சங்கத்தின் செயல் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில், சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இரவு சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Tuesday, June 8, 2010

பரங்கிப்பேட்டை மாநகரில் முப்பெரும் விழா!

ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா!
தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி!!

மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்!!!


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் இந்த மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் முப்பெரும் விழா நடைபெற இருக்கின்றது இன்ஷா அல்லாஹ்....

12ந் தேதி சனிக்கிழமையன்று தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி காலை 9.00 மணி முதல் இஷா வரை நடைபெற இருக்கின்றது.

இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அரபுக்கல்லூரிகள் மற்றும் ஹிஃப்ழு மதரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபிக்க இருக்கின்றனர்.

இரண்டாம் நாள் 13 ந் தேதி (13.06.2010) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் லுஹர் வரை உலக அளவிலும், அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்ட கிராஅத் போட்டிகளில் பல பரிசுகளை வென்ற தலை சிறந்த காரீகளின் (காரீ: முறையாக திருக்குர்ஆனை ஓதக்கூடியவர்) மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம் முதல் முறையாக நடைபெற இருக்கின்றது.

பிற்பகல் 1:30 மணி முதல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் திருக்குர்ஆனை முறையாக முழுவதுமாக மனனம் செய்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஹாஃபிழ் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கிராஅத் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.

மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் பெற்றுக் கொள்ளலாம்.








அல்லாஹ்வின் அருள்மறையை, அவனிக்கு வழிகாட்ட வந்த திருமறையை தேனினும் இனிய குரல்களில், உள்ளங்கள் உருகும் வகையில், நம்மை மெய்ச சிலிர்க்கும் முறையில் செவிகள் குளிர ஓதிக்காட்டப்படும் இந்த மாபெரும் கிராஅத் அரங்கிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அல்லாஹ்வின் அருள்மழையில் நனைய வேண்டும் என்றும் போட்டிகளில் பங்குபெறும மாணவச் செல்வங்களின் திறமைகளை நேரில் காணவும், ஹாஃபிழ் பட்டம் பெறும் மாணவர்களுக்கு துஆ செய்யவும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி மற்றும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி நிர்வாகிகள் அழைப்பு விடுக்கின்றனர்.

இந்த அழைப்பை தமிழறிந்த அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

தொடர்புக்கு:

முதல்வர்,
அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி,
ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி,
மீராப்பள்ளித் தெரு, பரங்கிப்பேட்டை - 608502,
கடலூர் மாவட்டம்.
தொலைபேசி: (04144) 25 33 11